பொக்லைன் ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை

பாளையங்கோட்டை அருகே பொக்லைன் ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-06-01 18:38 GMT

பாளையங்கோட்டை அருகே மருதூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் (வயது 52). ஜே.சி.பி. ஆபரேட்டர். இவர் குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி செல்லப்பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்