விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் சாவு
சாத்தான்குளத்தில் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் இறந்து போனார்.;
தட்டார்மடம்:
சாத்தான்குளத்தில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்து போனார்.
ஆட்டோ டிரைவர்
மேலசாத்தான்குளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவன்பாண்டி (வயது 42). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஞ்சியோகிராம் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாம்.
ஆனாலும்,ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பி பின்னர், தினமும் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் பிரச்சினை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். அவரை மது குடிக்க கூடாது என குடும்பத்தினர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர்.
மனைவி கண்டிப்பு
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவன்பாண்டிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால். சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் மீண்டும் மது குடிக்க தொடங்கியுள்ளார்.
இதில் வேதனையடைந்த மனைவி, மது குடிப்பதை நிறுத்துமாறு அவரை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தற்கொலை செய்ய உள்ளதாகவும் குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15-ந்தேதி களைக்கொல்லியை குடித்து விட்டதாக, உறவினர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
சாவு
உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்ைச அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்
இதுகுறித்து அவரது மனைவி சுனிதா அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.