தர்மபுரி பஸ் நிலையத்தில் விஷம் குடித்த வாலிபரால் பரபரப்பு

Update: 2022-11-14 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி பஸ் நிலையத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில் விஷம் குடித்த வாலிபர் குட்டூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக விஷம் குடித்தார்? என்பது தெரியவில்லை. பஸ் நிலையத்தில் வாலிபர் விஷம் குடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்