போக்சோவில் தொழிலாளி கைது

போக்சோவில் தொழிலாளி கைது;

Update: 2023-01-11 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு சென்று வரும்போது, சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளியான சபரி(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தினமும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் காதலிப்பது அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தால் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறுமி திடீரென்று மாயமானதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் பொள்ளாச்சி அனைத்து மகளில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கூலி தொழிலாளி சபரி வீட்டில் அந்த சிறுமி இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சபரியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்