போக்சோவில் தொழிலாளி கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வடமதுரை அருகே உள்ள குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தார். இந்நிலையில் குளத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.