கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-03-30 18:45 GMT

பேரூர்

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கல்லூரி மாணவியுடன் காதல்

கோவையை அடுத்த பேரூர் பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி, தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் ஈச்சனாரியை சேர்ந்த தனியார் கூரியர் நிறுவன ஊழியர் அஜய் (வயது 23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து அவர்கள் நேரிலும், செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி அஜய், அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவியின் உடலில் மாற்றம் ஏற்பட்டது. எனவே அவர்கள் ஸ்கேன் செய்து பார்க்க விரும்பினர்.

திருமணம் செய்தனர்

இதற்காக அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் கோவையில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்தது போல் தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

அந்த புகைப்படத்தை ஸ்கேன் மையத்தில் காண் பித்து தாங்கள் தம்பதி என்று கூறி அந்த மாணவிக்கு துடியலூரில் உள்ள ஒரு மையத்தில் ஸ்கேன் பார்த்து உள்ளனர். இதில் அந்த மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

எனவே தன்னை முைறப் படி திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி, அஜய்யிடம் கூறி உள்ளார்.

ஆனால் அவர் உறுதியான பதில் ஏதும் அளிக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த அந்த மாணவி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

போக்சோவில் வழக்கு

உடனே அவர்கள், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா அந்த மாணவியை தொடர்பு கொண்டு விசாரித்தார்.

இதையடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, 16 வயதுக்கு மேல் உள்ள சிறுமிகள் காதல் திருமணம் மற்றும் கர்ப்பமானால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது.

எனவே திருமணம் செய்த மற்றும் கர்ப்பமாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மட்டுமே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி அஜய் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்