தோட்ட தொழிலாளர்களுக்கு போக்சோ விழிப்புணர்வு

தோட்ட தொழிலாளர்களுக்கு போக்சோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-12-28 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் போலீஸ் நிலையம் சார்பில், தோட்ட தொழிலாளர்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள், குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கூட்டாடா கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் நடைபெற்றது. இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமை தாங்கினர். கஞ்சா, போதைபொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அவ்வாறு திருமணத்தை நடத்துவது சட்டப்படி குற்றம் எனவும், போக்சோ சட்டம் குறித்தும் போலீசார் விளக்கி பேசினர்.

போதைப்பொருட்கள் பழக்கத்தால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் நலம் கெடுதல், வருவாய் இழப்பு ஏற்படுதல், நினைவுத்திறன் பாதிப்பு, குற்ற செயல்களில் ஈடுபட தூண்டுவது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகின்றன. எனவே போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க, போதைப்பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். போக்சோ சட்டம் குறித்து பெற்றோர் மற்றும் குழந்தைகள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்