சத்தியமங்கலம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
சத்தியமங்கலம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிறுமி திருமணம்
பவானிசாகர் அருகில் உள்ள பகுடுதுறை பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த நிலையில் இவர் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிறுமியை சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பாரதி (வயது 23) என்பவர் திருமணம் செய்து கொண்டு அவரது தாத்தா வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது.
போக்சோவில் வாலிபர் கைது
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சைல்டு லைன் ஆலோசகர் தீபக்குமார் பகுடுதுறை சென்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை சந்தித்து விசாரித்தார். மேலும் இதுபற்றி சத்தியமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில் அவர், '15 வயதான சிறுமியை திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாரதி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாரதியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி கைது செய்தார்.