7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது

Update: 2022-11-11 21:38 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியை சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 55) இவர் சைக்கிள் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 23-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு அக்பர் அலி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு சைல்டு லைன் ஆலோசகர் ஜாஸ்மின் கிறிஸ்டி என்பவரிடம் புகார் அளித்தார்கள். இதுபற்றி அவர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அக்பர் அலியை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்