பங்களாப்புதூர் பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் தொழிலாளி கைது

பங்களாப்புதூர் பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் தொழிலாளி கைது

Update: 2022-08-18 21:11 GMT

டி.என்.பாளையம்

பங்களாப்புதூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 41). தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டுக்குள் தூக்கி சென்று பாலியல் ெதால்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதுபற்றி அறிந்ததும் நாகராஜை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த நாகராஜ், கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் சரியானதை தொடா்ந்து நாகராஜை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்