சிறுவர்களை தகாத உறவில் ஈடுபடக்கூறி ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்

வேளாங்கண்ணி அருகே சிறுவர்களை தகாத உறவில் ஈடுபடக்கூறி ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபரை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-04 19:15 GMT

வேளாங்கண்ணி அருகே சிறுவர்களை தகாத உறவில் ஈடுபடக்கூறி ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஆபாச வீடியோ

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே 10 வயதுடைய சிறுவன், அவனுடைய நண்பன் 15 வயதுடைய சிறுவன் ஆகிய 2 பேரையும் தகாத உறவில் ஈடுபடக்கூறி அதனை ஒருவர் செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும், சிறுவர்களுக்கு அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவர்கள், இதுதொடர்பாக தங்களுடைய பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் வேளாங்கண்ணி போலீசில் புகார் கொடுத்தனர்.

வாலிபர் கைது

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவர்களை தகாத உறவில் ஈடுபடக்கூறி அதனை ஆபாசமாக வீடியோ எடுத்தது வேளாங்கண்ணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் திருமணி(வயது21) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருமணியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்