பாக்கெட், பர்ஸ் இல்லை, ஆனால் பிக்பாக்கெட் என்கிறார்கள் - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பணப் பரிமாற்றமே இல்லாமல் பணச்செலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு சுமத்துவதாக முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-01 17:05 GMT

சென்னை,

பஞ்சாபில் உள்ள ஒரு நிறுவனத்தின் பணிகளை முடிப்பதற்காக 263 சீனர்களுக்கு முறைகேடான முறையில் விசா வழங்கப்பட்ட விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாகக் கூறி வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அவர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. அரசியல் பழிவாங்கலுக்காக மத்திய அரசால் சிபிஐ பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பணப் பரிமாற்றமே இல்லாமல் பணச்செலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு சுமத்துவதாக முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணச் சலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு.

தண்ணீரே இல்லாத குளத்தில் நீ அத்துமீறி நுழைந்து நீச்சல் செய்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்?

பாக்கெட்டும் இல்லை, பர்சும் இல்லை, ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்?" என்று அதில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்