திண்டிவனத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஏரியை ஆக்கிரமித்து புதிய பஸ்நிலையம் கட்டுவதாக கூறி திண்டிவனத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update: 2023-09-30 18:45 GMT


திண்டிவனம், 

திண்டிவனத்தில் புதிய பஸ்நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த புதிய பஸ்நிலையமானது ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டுவதாக கூறி, பா.ம.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக அவர்கள் திண்டிவனத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, புதிய பஸ்நிலையம் கட்டப்படும் இடத்துக்கு சென்றனர். அங்கு நகர செயலாளர் ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் கண்டனம் தெரிவித்து பேசினார்.

இதில் மாவட்டத் தலைவர் பாவாடைராயன், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், கவுன்சிலர்கள் ஹேமாமாலினி, மணிகண்டன் மற்றும் பூதேரி ரவி, ஏப்பாக்கம் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்