பா.ம.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

நெமிலியில் பா.ம.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-05-21 18:00 GMT

நெமிலியில் உள்ள வன்னியர் சங்க கூட்டரங்கில் பா.ம.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் மணி, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் பேரியக்க செயலாளர் திருமால் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் லோகநாதன் கலந்துகொண்டு தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேசினார். அப்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. அதிக இடங்களில் வெற்றி பெற அனைவரும் உழைக்கவேண்டும். வீடுகள் தோறும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக்கோரி அனைவரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்