பி.எம்.-2 காட்டு யானை தென்படவில்லை

கூடலூர் பகுதியில் பி.எம்.-2 காட்டு யானை தென்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Update: 2022-12-04 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் தாலுகா தேவாலா வாழவயல் பகுதியில் பாப்பாத்தி என்ற பெண்ணை கடந்த மாதம் 20-ந் தேதி காட்டு யானை தாக்கி கொன்றது. இதனால் சம்பந்தப்பட்ட யானையை பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து 4 கும்கி யானைகள் உதவியுடன் பி.எம்.-2 காட்டு யானையை பிடிப்பதற்காக தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

நேற்று கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வாச்சிக்கொல்லி, தேவர்சோலை, வுட்பிரையர் எஸ்டேட் பகுதிகளில் கூடலூர் உதவி வன பாதுகாவலர் கருப்பையா தலைமையில் கால்நடை மருத்துவக் குழுவினர், வனத்துறையினர் ரோந்து சென்றனர். மேலும் டிரோன் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டதில் பி.எம்.-2 யானை தென்பட வில்லை. ஆனால் பிற காட்டு யானைகளின் கால் தடயங்கள் அதிகமாக இருந்ததை கண்டனர். இதனால் பி.எம்.-2 யானை எந்த பகுதியில் இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்