பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
களக்காட்டில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு சரோஜினிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. இவர் கேரளாவில் தங்கியிருந்து அங்குள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சந்தனபிரபா, களக்காடு புதிய பஸ் நிலையத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவர்களது மகன் மைக்கேல் ஜெரோன் (18), ஒரு பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மைக்கேல் ஜேரோன் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல விரும்பினார். இதற்காக ஒரு படிப்பில் சேர பெற்றோரிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள், பணம் இல்லாததால் படிக்க வைக்க இயலாது என்று கூறி உள்ளனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த மைக்கேல் ஜெரோன் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மைக்கேல் ஜெரோனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டுக்கு செல்வதற்கு படிக்க வைக்காததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.