ப்ளஸ்-2 தேர்வில்கீதா மெட்ரிக்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை

ப்ளஸ்-2 தேர்வில் கீதா மெட்ரிக்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.;

Update: 2023-05-10 18:45 GMT

ஸ்பிக் நகர்:

முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 93 மாணவ- மாணவியர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

வணிகவியல் பாட பிரிவில் ரேகா என்ற மாணவி 577 மதிப்பெண்களும், உயிரியல் பிரிவில் ஷாப்பி நான்சி 563 மதிப்பெண்களும், கம்ப்யூட்டர் பிரிவில் யுவராஜ் என்ற மாணவன் 553 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் அறிவியலில் 7 பேரும் அக்கவுண்டன்சியில் ஒருவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்று உள்ளனர்.

தூத்துக்குடி போல் பேட்டையில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 72 மாணவ- மாணவியரும் தேர்ச்சி பெற்றனர் இதில் வணிகவியல் பாடப்பிரிவில் மாணவி சீதாலட்சுமி 595 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். உயிரியல் பிரிவில் மாணவி நிரஞ்சனா தேவி 590 மதிப்பெண்களும், கம்ப்யூட்டர் பிரிவு மாணவி நர்மதா 547 மதிப்பெண்களும் பெற்றனர். வணிகவியல் பிரிவில் 4 பேரும் அக்கவுண்டன்சி பிரிவில் 3 பேரும் வணிக கணிதத்தில் 3 பேரும் கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தலா ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற

மாணவ, மாணவியர்களை பள்ளித் தாளாளரும் அமைச்சருமான கீதா ஜீவன், பள்ளி செயலர் ஜீவன் ஜேக்கப், போலபேட்டை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெசிந்தா, முத்தையாபுரம் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்