பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கியது

கோடை விடுமுறைக்கு பின் பிளஸ்-2 வகுப்புகள் நேற்று தொடங்கியது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.;

Update: 2022-06-20 19:40 GMT

கோடை விடுமுறைக்கு பின் பிளஸ்-2 வகுப்புகள் நேற்று தொடங்கியது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் கடந்த கல்வியாண்டு (2021-2022) நேரடி வகுப்புகள் சற்று தாமதமாக தொடங்கின. ஆனாலும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வும், 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது.

இதன்பின்னர் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

மீண்டும் திறப்பு

இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் புதிய கல்வி ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு கடந்த 13-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கியது. இதையொட்டி மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் வந்தனர்.

நெல்லை மாநகரத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் பிளஸ்- 2 வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது. வகுப்பறையில் மாணவர்களுக்கு தலைமையாசிரியர் பல்வேறு அறிவுரைகளை கூறினார்.

பாடப்புத்தகம்

மேலும் கல்வித்துறை சார்பில் மாணவ- மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படக்கூடிய பாடப்புத்தகங்கள், சீருடைகள், போன்றவற்றை பள்ளிகள் தொடங்கிய முதல் நாளான நேற்றே வழங்கப்பட்டது.

சில பள்ளிக்கூடங்களில் புத்தகங்கள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்