பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தேனியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-06-14 17:03 GMT

தேனி பழைய டி.வி.எஸ் ரோடு ஜெகநாதன் தெருவை சேர்ந்த பெருமாள் சாமி மகள் கோபிகா (வயது 15). இவர் முத்துதேவன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதன் கதிர்வீச்சு தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோபிகா மீண்டும் பெற்றோரிடம் செல்போன் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் செல்போனை கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த கோபிகா நேற்று  மாலை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோபிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கோபிகாவின் தாய் பிரியா கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்