பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: 95.56 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்...!

பிளஸ் 1 தேர்வில் 95.56 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளது.;

Update: 2022-06-27 05:21 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,83,882 பேர் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் ஜூலை 7-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இத்தேர்வில் மொத்தம் 7.59 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தமாக 90.07% மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இதில் மாணவர்கள் 84.86%, மாணவிகள் 94.99% தேர்ச்சி அடைந்து உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இந்த நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாநில அளவில் 95.56 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளது. 95.44 சதவீத தேர்ச்சி பெற்று 2-வது இடத்தை விருதுநகர் மாவட்டம் பெற்று உள்ளது.

மேலும், 95.25 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சியுடன் மதுரை மாவட்டம் 3-வது இடத்தை பிடித்து உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்