பிளஸ்-1 பொதுத்தேர்வு; முதல் நாளில் 12,660 பேர் தேர்வு எழுதவில்லை என தகவல்
நேற்று நடைபெற்ற மொழி தேர்வை 12 ஆயிரத்து 660 பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளன்று மொழி பாடத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மொழி தேர்வை 12 ஆயிரத்து 660 பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற 12-ம் வகுப்பு மொழி தேர்வை 50 ஆயிரத்து 674 பேர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.