நாகை- திருச்செந்தூர் விரைவு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்
நாகை- திருச்செந்தூர் விரைவு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருத்துறைப்பூண்டி;
நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக திருச்செந்தூருக்கு தமிழ்நாடு அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வந்தது நாகப்பட்டினத்தில் மாலை 6 மணிக்கு பேருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம் தொண்டி, மீமிசல், சாயல்குடி, தேவிபட்டினம், ராமேஸ்வரம் வழியாக மறுநாள் அதிகாலை திருச்செந்தூரை இந்த பஸ் சென்றடையும். நாகை, திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பக்தர்கள் ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் செல்வதற்கு இந்த பஸ் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குறிப்பாக வியாபாரிகள் ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சென்று புளி, வெல்லம், பருப்பு போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வதற்கு இந்த பஸ் பயனுள்ளதாக இருந்தது. இந்த பஸ் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறாா்கள். எனவே கும்பகோணம் மண்டல போக்குவரத்துக்கழக மேலாளர் உடனடியாக நாகப்பட்டினம் முதல் திருச்செந்தூர் வரையிலான விரைவு பஸ்சை திருத்துறைப்பூண்டி வழியாக மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.