சேறும், சகதியுமாக மாறிய பிளவக்கல் அணை சாலை

வத்திராயிருப்பு அருகே அத்திக்கோவிலிலிருந்து பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்லும் சாலை சேறும் , சகதியுமாக காணப்படுவதால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2022-10-20 18:45 GMT

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு அருகே அத்திக்கோவிலிலிருந்து பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்லும் சாலை சேறும் , சகதியுமாக காணப்படுவதால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

தார்ச்சாலை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரத்திலிருந்து அத்திகோவிலுக்கு செல்லும் வழியில் சாலையின் வலதுபுறத்தில் பிளவக்கல் பெரியாறு அணைக்கு தார்ச்சாலை பிரிந்து செல்கிறது. இந்த தார் சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் சிரமம் இன்றி விவசாய பணியினை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டது.

தற்போது இந்த சாலையானது பராமரிப்பு இல்லாததால் முற்றிலும் சேதம் அடைந்து தார் சாலை மண் சாலையாக மாறிவிட்டது. மழைக்காலங்களில் இப்பகுதியில் விவசாயிகள் தங்களது விவசாய பணியினை மேற்கொள்ள சென்று வர முடியாத சூழ்நிலை நிலவி வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கோரிக்கை

மழைக்காலங்களில் முற்றிலும் இந்த சாலையானது சேறும், சகதியுமாக மாறி டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விவசாய நிலங்களுக்கு இதனால் உரங்கள் மற்றும் இதர பணிகளுக்கு எந்த ஒரு பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமல் தாங்கள் தவித்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த சாலையினை சீரமைத்து தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்