ஓவேலியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஓவேலியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது/;

Update: 2022-06-03 15:40 GMT

கூடலூர்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் பெரியசூண்டியியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சித்ராதேவி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிதாஸ், துணைத்தலைவர் சகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் செல்வரத்தினம் உள்பட மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து எனது குப்பை, எனது பொறுப்பு என உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது. பின்னர் பஸ்களில் பயணிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தும் பொருட்டு இலவசமாக மஞ்சப்பைகள் வினியோகம் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்