காங்கயத்தில் பிளாஸ்டிக் கவா்கள் உபயோகம் அதிகாிப்பு

காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகாித்துள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2023-10-12 18:11 GMT

காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகாித்துள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு

காங்கயம் நகராட்சி பகுதியில் மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்காிகள், டீகடைகள், பூக்கடைகள், சாலை ஓர கடைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அங்கு வாங்கப்படும் பொருட்களை வியாபாாிகள் பிளாஸ்டிக் கவாில் வைத்து கொடுக்கின்றனா். அதனை வாங்கி செல்லும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கவா்களை பொது இடங்கள், சாக்கடைகள், பஸ்கள், பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் வீசிவிட்டு செல்கின்றனா். இந்த பிளாஸ்டிக் கவா்கள் பொது இடங்களில் நீண்ட நாட்களாக மக்கி போகாமல் கிடந்து மண்ணில் புதைகிறது. இதனால் மழைநீா் நிலத்தடிக்குள் செல்வது தடைபடுகிறது. அதோடு நிலத்தில் தாவரங்கள் பயிா்கள் வளா்ச்சியை தடுக்கிறது.

மேலும் சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும் கிடக்கும் பிளாஸ்டிக் கவா்களை ஆடு,மாடுகள் தின்றுவிடுகின்றன.இதனால் கால்நடைகள் இறந்து போகவும் வாய்ப்பு உள்ளது. சாக்கடை கால்வாய்களில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கவா்கள் அடைப்பை ஏற்படுத்தி கழிவுநீா் செல்வதை தடுக்கிறது. இதனால் பல இடங்களில் சாக்கடை கழிவுநீா் தேங்கி நிற்கிறது அல்லது கழிவுநீா் கால்வாய்க்கு வெளியே வந்து சாலைகளிலும், நடைபாதைகளிலும் ஓடுகிறது. தற்போது காங்கயம் பகுதியில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே கிடக்கும் பிளாஸ்டிக் கவா்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு, வைரஸ் காய்ச்சல் உட்பட பல்வேறு தொற்று நோய்கள் பொதுமக்களுக்கு பரவும் நிலை உள்ளது.

நடவடிக்கை

எனவே காங்கயத்தில் பிளாஸ்டிக் கவா்கள் பயன்பாட்டால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். இது குறித்து வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது .எனினும் சந்தை மற்றும் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கவா்கள் புழக்கத்தில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள்

விரைந்து நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் கவா்கள் உபயோகிக்கும் கடைகளை கண்டறிந்து சட்டப்படி அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காங்கயம் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்