தோட்டக்கலைத்துறை சார்பில் பழக்கன்றுகள்

முகுந்தராயபுரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பழக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-08-12 00:40 IST

வாலாஜா

முகுந்தராயபுரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பழக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீடுதோறும் 5 வகை பழ மரக்கன்றுகள் வினியோகம் செய்யும் பணிகள் வாலாஜா வட்டாரத்தில் உள்ள முகுந்தராயபுரம் கிராமத்தில் நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குனர் மூ.பசுபதிராஜ் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.கே.முருகன் பழக்கன்றுகளை வழங்கி, நன்றாக பராமரிக்கும்படி கேட்டுகொண்டார்.

தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற www.tnhorticulture.tn.gov.in/kit-new/ என்ற இணையதளதில் பதிவு செய்ய தோட்டக்கலை உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் தோட்டகலை உதவி அலுவலர்கள் முனியப்பன், அன்பரசு மற்றும் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்