5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி;

Update: 2022-12-08 19:46 GMT

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், கோவிந்தராஜன், உதவி என்ஜீனியர் சத்யபாமா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கூடுதல் கலெக்டர் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்