சரவணம்பட்டி
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்குட்பட்ட அக்ரஹாரசாமக்குளம் ஊராட்சியில் 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் நடுவதற்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான பனை விதைகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஏரி கரையில் சுமார் 20 ஆயிரம் பனை விதைகள் மட்டும் நடப்பட்டுள்ளது. இது குறித்து பனை விதைகள் அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில், எங்களிடம் தற்போது 30 ஆயிரம் பனை விதைகள் உள்ளன. தங்கள் கிராமங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நடுவதற்கு பனை விதைகள் தேவைப்படுபவர்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றனர். தற்போது குளக்கரையில் பனை விதைகள் நடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.