அடர்வன குறுங்காடுகளில் மரக்கன்றுகள் நடும் பணி

அடர்வன குறுங்காடுகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.;

Update: 2023-08-19 19:08 GMT

புள்ளம்பாடி ஒன்றியம் கல்லகம் கிராமத்தில் அரசு நிலத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து அடர்வன குறுங்காடுகள் உருவாக்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு இணை ஆணையர் வைத்தியநாதன், ஊராட்சி மன்ற தலைவர் முரசொலி மாறன், ஒன்றிய கவுன்சிலர் வெற்றிசெல்வ ராமலிங்கம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கவிதாபூமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அடர்வன குறுங்காடுகளில் மா, புங்கன், வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், புதூர் பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் நளினிரவிச்சந்திரன், ஒன்றிய பொறியாளர் விமல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்