அனுமதியின்றி பதாகை வைப்பு: 2 பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி பதாகை வைப்பு: 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி தென்னூரை சேர்ந்தவர் பைஸ் அகமது (வயது 40). இவர் மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கல்லுக்குழி பாலம் அருகே த.மு.மு.க. சார்பில் மாநில செயற்குழு கூட்டம் பற்றிய பதாகையை அனுமதி பெறாமல் வைத்ததாக கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல திருச்சி பாலக்கரையை சேர்ந்த த.மு.மு.க. கட்சி பிரமுகர் ஒருவர் டெல்க் காம்பவுண்ட் பகுதியில் அனுமதி பெறாமல் கட்சி பதாகையை வைத்ததாக பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.