தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;

Update: 2022-09-26 18:45 GMT

தூத்துக்குடி அரசடி துணை மின்நிலையம், கொம்புக்காரநத்தம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் அரசடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மேல அரசடி, கீழஅரசடி, சமத்துவபுரம், தருவைகுளம், பட்டினமருதூர், தருவைகுளம், கிழக்கு கடற்கரை சாலை, வாலசமுத்திரம், புதூர்பாண்டியாபுரம், சில்லாநத்தம், வேலாயுதபுரம், சாமிநத்தம் மற்றும் எட்டயபுரம் ரோடு பகுதிகளிலும், கொம்புக்காரநத்தம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட வடக்கு காரசேரி, காசிலிங்காபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், ராமசாமிபுரம் புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கொல்லன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்