குழித்தட்டு நாற்றுகள் முழு மானியத்தில் பெற பதிவு செய்யலாம்

திருமருகல் வட்டார விவசாயிகள் குழித்தட்டு நாற்றுகள் முழு மானியத்தில் பெற பதிவு செய்யலாம்;

Update: 2023-08-24 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் திருமருகல் வட்டார விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக முழு மானியத்தில் குழித்தட்டு, கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் வழங்கப்படவுள்ளது. இதனை பெற விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றை கொண்டு 9715141468 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்