108 சிவலிங்கத்துடன் பக்தர்கள் காசிக்கு பயணம்
108 சிவலிங்கத்துடன் பக்தர்கள் காசிக்கு பயணம் மேற்கொண்டனர்.;
கும்பகோணத்தில் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வரும் சிவ பக்தர்கள் பல்வேறு புனித இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீருடன் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட களிமண்ணில் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை ரயில் மூலம் காசிக்கு தீர்த்த யாத்திரையாக கொண்டு சென்று வழிபாடு செய்ய முடிவு செய்தனர். அதன்படி 108 சிவலிங்கத்திற்கும் நேற்று முன்தினம் மாலை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 108 மண் சிவலிங்கத்தையும், பூஜை பொருட்களையும் காசிக்கு கொண்டு சென்றனர். இந்த பக்தர்கள் வருகிற 10-ந்தேதி கும்பகோணம் திரும்புகின்றனர்.