திருவானைக்காவலில் புறா பந்தய போட்டி
திருவானைக்காவலில் புறா பந்தய போட்டி நடைபெற்றது.
திருச்சி திருவானைக்காவல் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாநகர அளவிலான புறா பந்தயம் நடைபெற்றது. இதில் கர்ணபுறா மற்றும் சாதாரணபுறாக்கள் பங்கேற்றன. கர்ண புறா பந்தய போட்டியில் காலை 7மணிக்கு ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் பறக்கவிடப்பட்ட புறாக்கள் எல்லையை விட்டு வெளியே பறக்காமலும், வானத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்தவாறு தொடர்ந்து 5 மணி நேரம் வானில் பறந்துக்கொண்டிருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட பகுதிகளில் புறாக்கள் கர்ணம் அடிப்பதை உறுதி செய்ய வேண்டும், நடுவர்கள் குறிப்பிடும் இடத்தில் அமர வேண்டும். எந்தப் புறா அதிகநேரம் பறக்கிறதோ அந்தப் புறாவுக்கு பரிசுகள் வழங்கப்படும். 37 ஜோடி கர்ணபுறாக்கள் பறக்கவிடப்பட்டன. முன்னதாக போட்டியில் பங்கேற்ற புறாக்களுக்கு அடையாள முத்திரையிட்டு பதிவு செய்யப்பட்டது. பந்தயத்தில் வெற்றிபெறும் புறாக்களுக்கு தலா ரூ.15ஆயிரம், ரூ.12ஆயிரம், ரூ.10ஆயிரம் என ரொக்கபரிசுகள் வழங்கப்படுகின்றது. சாதாரண புறா போட்டி வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.போட்டிக்கான ஏற்பாடுகளை பாபா பாலாஜி மற்றும் தர்மு சுரேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.