முதன்முறையாக நடத்தப்பட்ட புறா பந்தயம்

முதன்முறையாக நடத்தப்பட்ட புறா பந்தயம்;

Update: 2023-01-16 11:56 GMT

திருப்பூர், ஜன.17-

திருப்பூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு முதல்முறையாக புறா பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் சிறகடித்து பறந்த 16 ஜோடி புறாக்களில், வானில் நீண்ட நேரம் பறக்கும் புறாவுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

புறா பந்தயம்

புறாக்கள் நெடுதூரம் வரை பறக்கும் திறனுடையது என்பதால் பண்டைய காலங்களில் புறாக்கள் கடிதப்போக்குவரத்துக்கும் மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இன்றைய சூழலில் அதன் நீட்சியாக தற்போது இந்த வகை புறாக்கள் நன்கு பயிற்சி கொடுத்து புறா பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பந்தயத்திற்காக பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டு விடப்பட்டு, மீண்டும் அவைகள் தங்கள் கூட்டுக்கு திரும்பி வரும் நேரத்தை வைத்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோவை, தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும்கூட இந்த புறா பந்தயங்கள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

16 ஜோடி புறாக்கள் பங்கேற்பு

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்முறையாக புறா பந்தயமானது நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட புறா களை வளர்ப்பு சங்கம் சார்பில் இந்த புறா பந்தயத்தை நடத்தினர். இதில் 8 புறா கூண்டுகள் என்ற வீகிதத்தில் 16 ஜோடி புறாக்கள் பந்தயத்தில் கலந்துகொண்டது. திருப்பூர் ரெயில் நிலையம் மற்றும் தமிழ்நாடு தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் புறா பந்தயமானது நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட புறாக்கள் தங்கள் இருப்பிட பகுதிக்கு சென்று கீழே இறங்காமல் தொடர்ந்து பறந்து கொண்டிருக்க வேண்டும். எந்த புறாக்கள் கீழே இறங்காமல் அதிகநேரம் வானில் பறக்கிறது என்ற நேரத்தை கணக்கிட்டு பரிசுகள் அறிவிக்கப்படும். இரண்டு நாட்கள் நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறும் புறாக்களுக்கு சான்றிதழ்களும், புறா உரிமையாளர்களுக்கு பரிசுத்ெதாகையும் வழங்கப்பட உள்ளது.

------------


Tags:    

மேலும் செய்திகள்