மீன் மார்க்கெட் அமைக்க கோரி மறியல்

மீன் மார்க்கெட் அமைக்க கோரி மறியல் ேபாராட்டம் நடைபெற்றது.;

Update: 2023-01-24 19:03 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முனியசாமி, தங்கராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு விசைத்தறி உற்பத்தியில் ரக ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் மார்க்கெட் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 64 பெண்கள் உள்பட 147 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்