கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல்

மோசமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2023-09-29 18:45 GMT

சிவகங்கை

மோசமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.

மறியல் போராட்டம்

சிவகங்கையை அடுத்துள்ள கருங்காப்பட்டியில் இருந்து வஸ்தாபடி வரை செல்லும் சாலை மிக மோசமாக உள்ளதாகவும், அங்கு புதிய சாலை அமைக்க கோரியும் பல வருடங்களாக கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை என்றும், சாலையை சீரமைக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தை

இதில் இந்திய கம்யூனிஸ்டு சிவகங்கை நகர செயலாளர் மருது, ஊராட்சி தலைவர் மலைச்சாமி, நகர துணை செயலாளர்கள் பாண்டி, சகாயம், ராஜாராம், மாடசாமி, வக்கீல் கிருஷ்ணன், மாவட்ட பொறுப்பாளர்கள் குஞ்சரம் காசிநாதன், ராஜேஸ்வரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன், காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள், பொறியியல் பிரிவு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது 2 மாதத்தில் சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்