சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல்தகுதி தேர்வு

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நடைபெற்றது.

Update: 2022-09-21 19:35 GMT

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள் தங்களுக்கு வாய்ப்பு வழங்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்பேரில், ஏற்கனவே நடைபெற்ற உடல்தகுதி தேர்வில் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்க முடியாத 10 பேருக்கு மட்டும் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை உடல் தகுதி தேர்வு நடந்தது. இதில் தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, எடை, மார்பளவு, உயரம் அளக்கப்பட்டது. அதன்பிறகு சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 1,500 மீ.ஓட்டம் நடைபெற்றது. இந்த தேர்வினை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்