உடற்கல்வி ஆசிரியை விஷம் தின்று தற்கொலை
உடற்கல்வி ஆசிரியை விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாலையீட்டை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகள் ரேவதி (வயது 40). இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக தற்காலிகமாக பணியாற்றி வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டில் எலி பேஸ்ட் (விஷம்) தின்றார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.