பழையூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
பழையூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
கிருஷ்ணகிரி:
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருக்கனஅள்ளி ஊராட்சி பழையூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. அரசின் சிறப்பு திட்டங்களான இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பான 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.