காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு;
பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடிவருகின்றனர்.
பெட்ரோல் குண்டு வீ்ச்சு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆனை விழுந்தான் குளத்தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் (வயது 26). இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவரணி பொதுச்செயலாளராக உள்ளார். நேற்று இரவு 1 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் திடீரென ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர்பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதில் வீட்டு கதவில் இருந்த திரைச்சேலை மட்டும் எரிந்து சாம்பலானது. ஆனால் வீட்டில் இருந்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் இ்ல்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெட்ேரால் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.
மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.