பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் முகாம்
பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் முகாம்;
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் வருகிற 23-ந்தேதி நாகை மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி இந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வாங்கும் முகாம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா செந்தில்குமார் வரவேற்றார். சமூக நலத்திட்ட தனி தாசில்தார் ரமேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 23-ந்தேதி நடைபெறும் மக்கள் நேர்காணல் முகாமில் தீர்வு காணப்படும். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் இருளப்பன் நன்றி கூறினார்.