அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர் கலெக்டரிடம் மனு

பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவில் தீப திருவிழா விவகாரம் குறித்து அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2022-12-12 19:00 GMT

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் மலைமேல் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. கடந்த 6-ந் தேதி கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்றுவது சம்பந்தமாக அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர் மற்றும் தி.மு.க.வினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனுடைய மகா தீபத்தை கோவில் அர்ச்சகர் ஏற்றி வைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் சிலர் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் கைலாசநாதர் கோவிலில் பராமரிப்பு குழு செயலாளர் சிவக்குமார் கூறுகையில், கார்த்திகை தீபத்திருநாள் நிகழ்ச்சியில் எவ்வித சமூக நீதியும் இழைக்கப்படவில்லை. விழாக் குழுவில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பொறுப்பாளராக உள்ளனர். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் விழாவை ஒற்றுமையாக இருந்து நடத்துவோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்