சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2023-05-01 18:34 GMT

கந்தர்வகோட்டை தாலுகா கோவிலூர் கிராமத்தில் வங்காரஓடை தெருவில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான சாலையை தனிநபர் ஆக்கிரமித்து சாலையை அடைத்துள்ளார். இந்த சாலை பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த சாலை வழியாக அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள், தெற்கு செட்டியார் தெரு, ராஜகோபால் நகர், வங்கார ஓடை முஸ்லிம் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட பின் அந்த நபர், இந்த சாலையை ஆக்கிரமித்துள்ளார். இதனால் இந்த சாலையை பயன்படுத்திய மக்கள் மாற்றுப்பாதை இல்லாத நிலையில் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த சாலை 1982-ம் ஆண்டு கந்தர்வகோட்டை ஊராட்சியின் நிதியிலிருந்து மெட்டல் சாலையாக அமைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த இந்த சாலையை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பொது பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்