குளித்தலை நகர பஸ் நிலைய வியாபாரிகள் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

குளித்தலை நகர பஸ் நிலைய வியாபாரிகள் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

Update: 2023-02-13 19:00 GMT

குளித்தலை நகர பஸ்நிலைய வியாபாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை நகராட்சியில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு வியாபாரிகள் சங்கத்தலைவர் தவசி தலைமை தாங்கினார். முன்னதாக அவர்கள் குளித்தலை காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக குளித்தலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்து அதன் முன்பு நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை குளித்தலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரிடம் வழங்கினர். அந்த மனுவில், சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம் குறித்து அரசு அதிகாரிகள், காவல்துறையினருக்கு முறையான பயிற்சி அளித்திட வேண்டும். சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கிடவேண்டும், வெண்டிங் கமிட்டி, தொழிற்சங்கங்களின் ஆலோசனையை பெற்று இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும், வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக நடத்தவும், தேர்தலில் அனைவரும் பங்கேற்கும்படி ஜனநாயக பூர்வமாக நேர்மையாகவும் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்