வீட்டுமனை பட்டா கேட்டு நரிக்குறவர்கள் மனு

ஆற்காடு நகரமன்ற தலைவரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு நரிக்குறவர்கள் மனு அளித்தனர்.

Update: 2022-09-23 18:45 GMT

ஆற்காடு

ஆற்காடு நகரமன்ற தலைவரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு நரிக்குறவர்கள் மனு அளித்தனர்.

ஆற்காடு பஸ் நிலையத்தில் 19 குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் பல ஆண்டுகளாக தங்கி வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு நிலையான ஒரு இடம் வேண்டும் என ஆற்காடு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியனிடம் மனு கொடுத்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட நகரமன்ற தலைவர் இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்]

Tags:    

மேலும் செய்திகள்