காப்பீடு தொகை வழங்ககோரி கலெக்டரிடம், விவசாயிகள் மனு

காப்பீடு தொகை வழங்ககோரி கலெக்டரிடம், விவசாயிகள் மனு அளித்தனர்.

Update: 2023-10-07 18:45 GMT

தமிழக வைகைபாசன விவசாய சங்க தலைவர் பாக்கியநாதன் தலைமையில் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- முதுகுளத்தூர் தாலுகாவில் தாளியரேந்தல், ஆதங்கொத்தகுடி, தேரிருவேலி, கீழச்சிறுபோது விவசாயிகளுக்கு தேசிய வேளாண் காப்பீட்டு தொகை முழுமையாக கிடைக்கவில்லை. எனவே காப்பீட்டு தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். ஒரு கிலோ நெல் கூட கிடைக்காத மேற்படி வருவாய் கிராமத்தில் பயிர் அறுவடை பரிசோதனை மற்றும் ரேண்டம் எண் மகசூல் சோதனை அறிக்கையால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விவசாயிகளின் பங்கு தொகை மற்றும் தமிழக அரசு செலுத்திய ரூ.1325 கோடி என மொத்தம் ரூ.2319 கோடி காப்பீட்டு கட்டணம் பெற்ற காப்பீடு நிறுவனங்கள் ரூ.560 கோடி மட்டும் காப்பீடாக வழங்கி விட்டு ரூ.1759 கோடி லாபம் அடைந்துள்ளது. ஆதலால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகள் நெல் மகசூல் அழிந்த நிலையில் உழுது பருத்தி மற்றும் எள் நடவு செய்து உள்ளதை புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு விவசாயிகளை வஞ்சிப்பது நியாயமில்லை. எனவே தேசிய வேளாண் காப்பீட்டு தொகை 100 சதவீதம் விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் என கூறி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்