விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைக்காககையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் நிவாரண தொகை வழங்க வேண்டும்கலெக்டரிடம், 7 கிராம விவசாயிகள் மனு

விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் நிவாரண தொகை வழங்க வேண்டும் என கலெக்டரிடம், 7 கிராம விவசாயிகள் மனு கொடுத்தனர்.;

Update: 2023-05-08 18:45 GMT

வடலூர் அருகே உள்ள ஆபத்தாரணபுரம், சேராக்குப்பம், ரோடு ஆண்டிக்குப்பம், ராஜாக்குப்பம், அரங்கமங்கலம், உள்மருவாய், மருவாய் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பாலசுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைக்காக கடந்த 2014-ம் ஆண்டு ஆபத்தாரணபுரம் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த சுமார் 120 விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு வழங்கப்பட்ட நிவாரண தொகை மிகவும் குறைவான மதிப்பீட்டில் வழங்கப்பட்டதால், நிலத்தின் மதிப்பிற்கு ஏற்ப கூடுதல் நிவாரண தொகை வழங்க வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தோம். இதில் சில விவசாயிகளுக்கு மட்டும் கூடுதல் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், சுமார் 85 விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனால் விவசாயிகள் நலன் கருதி கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்