கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி; சோதனைக்கு பின்னரே மனு கொடுக்க அனுமதி

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

Update: 2022-07-04 05:58 GMT

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் சிலர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இச்சம்பவத்தின் எதிரொலியாக மனு கொடுக்க வரும் அனைத்து பொதுமக்களும் போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்