பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
சிவகாசி அருகே உள்ள பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி பச்சையாபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை, மருந்து சாத்துதல், தீபாராதனை, 2-ம் கால யாக பூஜை, சுமங்கலி பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூைஜகள் நடைபெற்றன. தொடர்ந்து பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.